உன்னத் பாரத் அபியான் திட்டத்திற்காக தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரிக்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் என்ற திட்டத்தின் மூலம் கல்லூரிக்கு அருகில் உள்ள ஐந்து கிராமங்களை தேர்ந்தெடுத்து அந்த கிராமங்களின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் மேலும் மத்திய மாநில அரசு திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கள் தொழிற்பயிற்சிகளுக்கு வழிகாட்டப்படுகிறது. இவ்வாறு கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செயல்படுத்தி வருகின்றனர்.
2023- 2024 கல்வியாண்டில் சிறப்பாக இத்திட்டத்தை செயல் படுத்தி வரும் கல்லூரிகளுக்கு விருது வழங்கும் விழா காந்திகிராம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் சிறந்த பங்களிப்பார்கள் விருதுஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டது. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வரும் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணிக்கு சிறந்த ஒருங்கிணைப்பாளர் விருதும் வழங்கப்பட்டது. அவர்களுக்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ரூபா., கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.


