தூத்துக்குடியில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு ரூ.25ஆயிரம் கல்வி கட்டணம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கும் நிகழ்வு அறக்கட்டளை நிறுவனர் ஜாய்சன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 6 மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்பட்டது. ஆசிரியர் ஜேம்ஸ், அறக்கட்டளையின் பொருளாளர் விக்னேஷ், காப்பக ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கல்வி கட்டணம் வழங்க உதவிய போப் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் வெலிங்டன், வஉசி கல்லூரி பேராசிரியர் கிறிஸ்டோ செட்ரிக், மற்றும் துபாயிலிந்து உதவிய ராம் கிஷோர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது


