தூத்துக்குடியில் மாற்றுதிறனாளிகளுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கிய சந்தானம் பேக்கேஜிங் பிரைவேட் லிட் நிறுவனத்திற்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் பழமை வாய்ந்த சந்தானம் பேக்கேஜிங் பிரைவேட் லிட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதன்படி இந்த நிறுவனத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலை பார்த்து வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு வழங்கிய சேவையை பாராட்டி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறந்த தனியார் நிறுவனம் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.
இந்த விருதை சென்னையில் நடந்த சுதந்திர தினவிழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்கரங்களால் இந்நிறுவன உரிமையாளர் ஜி.சந்தானம் பெற்றுக் கொண்டார். மேற்படி விருதினை பெற்றுக் கொண்ட நிறுவனத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆட்சியர். கே.லட்சுமிபதியிடம் விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய மேலாளர் சொர்ணலதா, மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் கே.பி.பிரம்மநாயகம் மற்றும் முதல்வர் விருது வாங்கிய சந்தானம் பேக்கேஜிங் பிரைவேட் லிட் உரிமையாளர் சந்தானம் துடிசியா துணைத் தலைவர் மற்றும் ஜி.ராஜேந்திரன், ஜி.கண்ணன், ஜி.ஜெயக்குமார், எம்.குருசேகர், எம்.முத்துவேல், எஸ்.குரு சதீஷ், ஆர்.குருமனோஜ் ஆகியோர் உடனிருந்தனர். தமிழக முதலமைச்சர் விருது பெற்ற நிறுவனத்தை துடிசியா தலைவர் நேரு பிரசாத் உட்பட அனைத்து நிர்வாகிகளும் பாராட்டினர்.


