தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு புறப்பட்ட பாலருவி விரைவு ரயிலை பயணிகள் நலச்சங்கத்தினர், பாஜகவினர் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருநெல்வேலி – பாலக்காடு “பாலருவி விரைவு ரயில்” தூத்துக்குடி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து முதன் முறையாக வாஞ்சி மணியாச்சி பைபாஸ் வழியாக இந்த ரயில் செல்கிறது. இந்த ரயிலை தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நல சங்கம் மற்றும் கேரள சமாஜம் சார்பாக மலர்களால் அலங்கரித்து வாழை தோரணம் கட்டி பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வழி அனுப்பி வைக்கப்பட்டது.
இதில், தூத்துக்குடி ரயில் நிலைய மேலாளர் ராஜ், சீப் கமர்சியல் இன்ஸ்பெக்டர் உத்திர முருகன், மற்றும் கமர்சியல், டிராபிக், மெக்கானிக் ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு ரயில்வே போலீஸ், மற்றும் பொதுமக்கள் கொண்டனர்.
மேலும் பாஜக சார்பில் ரயில் பயணிகளுக்கு இனிப்பு, தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட தலைவரும் ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினருமான சித்ராங்கதன், ஓபிசி அணி விவேகம் ரமேஸ், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் சிவராமன், சண்முகசுந்தரம், இசக்கிமுத்து, வீரமணி, கலைசெல்வன், சுவைதார், கனல் ஆறுமுகம், பாஜக நிர்வாகிகள் சண்முகசுந்தரம், வன்னியராஜ், பால்மனோகர், சங்கர்கணேஷ், சொக்கலிங்கம், மற்றும முருகேசன், மணிகண்டன், செல்லப்பா, கனி, பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்



