எழுத்தாளர்கள் சோ.தர்மன், முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சிதலைவர் லெட்சுமி பதியை நேரில் சந்தித்து புத்தக கண்காட்சி தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து எழுத்தாளர்கள் கொடுத்த மனுவின் விவரம் வருமாறு
கடந்த 2023 ஆம் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த முறையில் புத்தக கண்காட்சி நடந்து முடிந்தது. அதில் பல்வேறு அறிஞர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நெய்தல் திருவிழாவும் மிகச்சிறப்பாக நடந்தது. தாங்கள் இந்த ஆண்டும் புத்தக கண்காட்சியை மழை காலத்திற்கு முன்பாக நடத்திட வேண்டும்.
எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள் சொந்த ஊரான உருளைக்குடியில் நூலக கட்டிடம் அமைத்து தரவேண்டும்.
தாங்கள் தாமிரபரணியை சுத்தப்படுத்த தாங்கள் எடுத்த நடவடிக்கைக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதற்காக கடந்த மாதம் கலியாவூரில் இந்த பணியை துவக்கி வைத்தீர்கள். ஆனால் அவ்விடம் மிகப்பெரிய இடம். மேலும் தாமிரபரணி பணி செய்வது பெரிய அளவில் மக்கள் மத்தியில் தெரிந்து பிரபலமாகாது. எனவே தயவு கூர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து ஆழ்வார்திருநகரி பாலம் வரை இருகரையில் உள்ள முள்செடிகளையும், தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகளை அகற்றி, மரங்கள் நட வேண்டும். பாராம்பரிய முக்க வைணவத்தலங்களில் முதல் திருப்பதியில் இருந்து கடைசி திருப்பதி வரை சுத்தம் செய்ய வேண்டுகிறோம்.
நமது மாவட்டத்தில் உள்ள நினைவுச்சின்னங்கள் பல உள்ளன. இவை அனைத்தும் நமது மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு நிரந்தர வாட்சுமேன் மற்றும் பகுதி நேர நூலகர் அமைத்து நூலகம் அமைத்து அப்பகுதியில் உள்ள மக்களை போட்டி தேர்வுக்கு தயார் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
நமது மாவட்டத்தில் இந்தியா அளவில் முதன் முதலில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மியூசியம் இருக்கிறதே மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு தெரியவில்லை. எனவே 10 நாள் கருத்தரங்கு ஒன்றை ஆதிச்சநல்லூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைத்து அங்கு அனைத்து கல்லூரி மற்றும் உயர் கல்வி மாணவ மாணவிகளை பார்வையிட செய்து, தினமும் ஒரு தொல்லியல் அறிஞரை கொண்டு படம் கருத்துரை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை தாங்கள் துவங்கி வைத்து, நமது நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்களையும் துவங்க விழா, நிறைவு விழாவில் பேச அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தாமிரபரணி ஆற்றில் பு-ளியங்குளம் ஆற்று பகுதியில் செக் டேம் அமைத்து, அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு வரை படகு போக்குவரத்து நடத்திட சுற்றுலா துறை மூலமாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்துக்கு பார்வையிட வரும் மக்கள் இந்த சுற்றுலாவை பயன்படுத்த ஏதுவாக இருக்கும் . அதற்கான ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.
நமது மாவட்டத்தில் தான் அதிக அளவில் சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளனர். இதில் சுமார் 300க்கு மேற்பட்ட தியாகிகள் உள்ளனர். அதில் 27 தியாகிகளை நமது முன்னாள் மாவட்ட ஆட்சித்த¬ல்வர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகைப்படங்களை காட்சிப்படுத்தியுள்ளார். மேலும் பல தியாகிகள் உள்ளனர். அவர்கள் புகைப்படத்தினையும் காட்சிப்படுத்தி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
என்பது உள்பட பல கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். அவர் ஆவண செய்வதாக வாக்களித்தார்.