சாத்தான்குளம் அருகே கடத்த முயன்ற 20 மூடை ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் வருவாய்த்துறையினர் புதன்கிழமை கைப்பற்றினர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம் பழங்குளம் கிராமம் கருவேலம் பாட்டில் இன்று காலை நியாயவிலைக் கடையிலிருந்து அரிசி கடத்தப்படுவதாக வரப்படுவதாக சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்டாட்சியர் தங்கையா, வட்ட வழங்கல் அலுவலர் மைக்கேல் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் வாகன தணிக்கை சேதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது அறிவான்மொழி – பழங்குளம் செல்லும் சாலையில் ஆம்னி வேன் ஓட்டுநர் இல்லாமல் நின்றது. வாகனத்தை தணிக்கை செய்யப்பட்டதில் அதில் சுமார் 50 கிலோ கொண்ட 20 மூடைகளுக்கு மேல் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. உடன் வருவாய்த் துறையினர் ரேசன் அரிசி மூடை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசி எங்கிருந்து கடத்தப்பட்டதற்கு குறித்தும், யார் இந்த செயலில் ஈடுப்பட்டது என வருவாய்த் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.