செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா 6 ஆம் நாள் திருவிழா நடந்தது.
இதையட்டி ஐந்தாவது நாளான இன்று 16 ந்தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமானது. சிவன், சக்தி, நடராஜர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு அபிசேகம் அலங்கார தீபாரதனை நடந்தது. மாலை 5 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி தீபாராதனை, சுவாமி திருக்கோவில் உள்பிரகார வீதி உலா எழுந்தருளல் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மண்டப படி கட்டளைதாரர் செய்துங்கநல்லூர் வேல்முருகன் சார்பில் கோயில் பூஜைகளை வெங்கடாசலம் வாத்தியார், முத்துராமன் உள்பட குழுவினர் செய்து வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆன்மீக பேரவையினர் செய்து வருகின்றனர்.


