திருநெல்வேலிக்கென்று எத்தனையோ அடையாளங்கள் இருந்தது அவைகளே பிற்க்காலத்தில் வரலாறாய் மாறி இன்று வரை இருந்து வருகிறது.ஆனால் அத்தகைய அடையாளங்கள் இன்று வரை உயிர்ப்புடன் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை.
அதனை நமது முன்னோர்களும்,அரசும் பாதுகாக்க தவறிவிட்டார்கள். ஆனால் அழிவின் விழிம்பில் இருக்கும் இன்னும் எத்தனையோ அடையாளங்களை நாமும்,அரசாங்கமும் நினைத்தால் அவற்றை மீட்டுருவாக்கம் செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து இன்னும் பல ஆண்டுகள் அதன் தொன்மையை உலகறிய செய்யலாம்.
அந்த வகையில் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சீவலபேரி சாலையில் உள்ள திம்மராஜபுரத்தில் (சாந்திநகர்) ஒரு மணி கூண்டு ஒன்று மிகவும் பாலடைந்து போய் சிதிலமடைந்து உள்ளது.


