கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி வானவியல் மன்றத்த்தை துவக்கி வைத்து மாணவ மாணவிகள் டெலஸ்கோப் மூலம் வல்லநாடு மலையில் உள்ள பார்வதியம்மன் கோவிலையும் இயற்கை காட்சிகளையும் கண்டு மகிழ்ந்தனர் படிப்பில் ஆர்வம் ஏற்பட இந்நிகழ்வு உதவுகிறது என்றனர் தலைமையாசிரியர் லதா தலைமை தாங்கினார். தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் முத்துசாமி வன்னியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். அறிவியல் ஆசிரியை சுதா நன்றியுரை தந்தார்.


