தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்திரவுபடி ஸ்ரீவைகுண்ண்டம் வட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளின் குறைதீர் சிறப்பு முகாம் ஸ்ரீவைகுண்ண்டம் புதுக்குடியிலுள்ள ஸ்ரீரெங்கராஜா மஹாலில் வைத்து நாளை காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி கோட்டாட்சியர்அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இம்முகாமிற்கு தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொள்கிறார்கள். ஸ்ரீவைகுண்ண்டம் வட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகளை இச்சிறப்பு முகாமில் நேரடியாக கலந்து கொண்டு தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை ஸ்ரீவைகுண்டம் நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் ராமேஷ் அவர்கள் தெரிவித்தார்.


