15.12.2021 புதன் கிழமை காலை 8.00 மணியளவில் விஸ்வகர்மா கலை வளாகத்தில் 203 வது ஆண்டு விஸ்வகுல உரிமை மீட்பு தினம் கொண்டாடப்பட்டது
இருநூறாண்டுகளுக்கு முன் சித்தூர் அதாலத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உரிமையை மீட்டுத் தந்தவிஸ்வகர்ம பண்டிதர் மார்க்க சகாய ஆச்சாரியார் அவர்கள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சி நான்காவது ஆண்டாக நடைபெறுகிறது. முன்னதாக 8.12.2021 அன்று குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இந்திய தேசிய முப்படைகளின் முதல் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதீய ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் முத்துமாலை ஆச்சாரி தலைமை வகித்தார்.பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஆச்சாரிவெங்கடேஷன் ஆச்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன் இனிப்பு வழங்கினார்.ராமலிங்கம் ஆச்சாரிகற்குவேல் ஐயப்பன் ஆச்சாரி என பலரும் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடு செய்த கவிஞர் ஏரல் ராஜன் நன்றி கூறினர்


