செய்துங்கநல்லூர் அருகே உள்ள அய்யனார்குளம்பட்டி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி தினம் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு கட்டிட ஒப்பந்ததாரர் சுடலைமணி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலெட்சுமி வரவேற்புரை ஆற்றினார். காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
ஆசிரியர் வீரலெட்சுமி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


