இன்று காமராசர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாகவும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைத்துள்ளது. அதன் பொருட்டு தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் ஆழிகுடி ஊராட்சியில் உள்ள உரோமன் கத்தோலிக்க தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் பள்ளியின் தாளாளர் சங்கத்துக்குரிய மார்ட்டின் குமார் மற்றும் தலைமை ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் கருங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சுடலைமுத்து மற்றும் தினேஷ் தலைமையில் அரசு உதவி பெறும் பள்ளியான உரோமன் கத்தோலிக்க தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. நிகழ்வில் மகளிர் சுய உதவிக்குழுவினர்
பெற்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ச்சியாக மாணவர்கள் கர்ம வீரரின் சிறப்பை எடுத்தியம்பும் விதமாக பல்வேறு பேச்சுப்போட்டி கவிதைகளை அறங்கேற்றினர். இறுதியாக ஆசிரியர் பீ லூயிஸ் பூபாலராயன் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.


