தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஆர்ப்பாட்டத்ல் ஈடுபட்டனர்.
மாதாந்திர உதவிதொகை குறைந்தபட்சம் 3 ஆயிரம் வழங்க கோரியும், அதிக ஊனமுற்றோருக்கு 5 ஆயிரம் வழங்க கோரியும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் விதமாக இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் மன்பு மாவட்ட குழு உறுப்பினர் மணிமந்திரம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைச்செயலாளர் கண்ணன் துவக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாடசாமி, பொன்னுதாய், லெட்சுமி, கனகா, பூல்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


