ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வருஷாபிஷேகம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெற்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று வருஷாபிஷேக விழா நடந்து. இதற்காக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டது. பின்னர் சிறப்பு யாகம் நடந்தது. அதன்பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் கோவில் மேலே உள்ள கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது.
அதன்பின்னர் வெற்றி விநாயகருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கோட்ட கலால் வட்டாட்சியர் சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் செல்வகுமார், தலைமையிடத்து துணை வட்டாச்சியர் மைக்கேல், முதல்நிலை வருவாய் ஆய்வாளர் அய்யனார், அலுவலர் சுப்பிரமணியன், மகராஜன் உள்பட அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


