ஸ்ரீவைகுண்டம் பேருந்து பணிமனை முன்பு சிஐடியு சங்க புதிய பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சிஐடியு சங்கத்தின் புதிய பெயர் பலகை திறப்பு விழா இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சிபிஎம் ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் கட்சி கொடியே ஏற்றினார். சங்க கொடியை இலட்சுமணன் ஏற்றி ஏற்றினார். சங்க பெயர் பலகையை பணிமனை தலைவர் சிவசுப்பு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சம்மேளன குழு உறுப்பினர் சங்கிலி பூதத்தான், மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் சிவகுமார், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


