ஓட்டப்பிடாரத்தில் கிராம வள பயிற்றுநர்களுக்கு பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட சமூக தணிக்கை பயிற்சி முகாம் நடந்தது
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சமூக தணிக்கை சங்க அலகின் சார்பில் கிராம வள பயிற்றுநர்களுக்கான பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட சமூக தணிக்கை பயிற்சி முகாம் நடந்தது.
2016-17ஆம் ஆண்டு முதல் 2022-23 ம் நிதியாண்டில் கிராம ஊராட்சிகளில் நடந்த பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்திற்கான சமூகத் தணிக்கை நடைபெற உள்ளது. சமூகத் தணிக்கை செய்வதற்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் கிராம வள பயிற்றுநர்களுக்கு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி தலைமை வகித்தார்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகந்தி பாலின் முன்னிலை வகித்தார். கிராம வளபயிற்றுனர் தனலட்சுமி அனைவரையும் வரவேற்றார். ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசினார்.
வட்டார வள பயிற்றுனர்கள் முத்து முருகன், ராமச்சந்திரன், முத்துராஜ் ஆகியோர் பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட சமூக தணிக்கை குறித்து பயிற்சி அளித்தனர். இதில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட கிராம வள பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் கிராம வள பயிற்றுனர் முத்துமாரி நன்றி கூறினர்.


