டிடிவி தினகரன் வருகிற 25ஆம் தேதி தூத்துக்குடி வருகையை முன்னிட்டு அமமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அம்மாமக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகிற 25ஆம் தேதி தூத்துக்குடி வருகையினை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக கொடுக்கபட வேண்டிய வரவேற்பு நிகழ்ச்சி தொடர்பான மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் பகுதி செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து மாநகர் மாவட்ட செயலாளர் பிரைட்டர் பேசுகையில், தூத்துக்குடிக்கு வருகைதரும் கழக பொதுச்செயலாளருக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று நிர்வாகிகளிடம் ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் எம்ஜிஆர் மன்ற துணைச்செயலார் பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


