தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் கோவில்பட்டி ஓவிய ஆசிரியர் வேல்முருகனுக்கு சிறந்த கலை ஆசிரியருக்கான விருதுவழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வேல் முருகனுக்கு தஞ்சை ஓவியங்களை சிறப்பாக கற்றுக் கொடுத்தமைக்கு சிறந்த கலை ஆசிரியருக்கான விருது மற்றும் ரூ10,000/-க்கான காசோலையினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடந்த 10ம் தேதி சென்னையில் வழங்கினார்.
இதில் சுற்றுலாத்துறை செயலாளர் மணிவாசன், கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி,கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் சிவ சௌந்தரவல்லி, உள்பட பலர் கலந்து உள்ளனர். சிறந்த கலை ஆசிரியர் விருது பெற்ற வேல்முருகனை கோவில்பட்டி பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன்,பள்ளி ஆசிரியர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


