கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடிய கல்லூரி மாணவர் மணிமாறனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 5 முதல் 18ஆம் தேதி வரை பெல்ஜியத்தில் நடந்த ஹாக்கிபோட்டியில் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி சார்பில் விளையாட கோவில்பட்டி எஸ்.,எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வியியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் மணிமாறனை ஆக்கி இந்தியா தேர்வு செய்தது.பெல்ஜியத்தில் நடந்த ஹாக்கிப் போட்டியில் விளையாடிய மணிமாறனை கோவில்பட்டி எஸ் எஸ் துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி நிர்வாகம் நினைவு பரிசு வழங்கி பாராட்டியது.
கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.முதல்வர் செல்வராஜ்,உடற் கல்வியியல் துறை தலைவர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் ரமேஷ் பாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி நகர் மன்ற தலைவரும்,நாடார் உறவின்முறை சங்க தலைவருமான ஆர்.எஸ்.ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஹாக்கி வீரர் மணிமாறனை பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதில் பேராசிரியர்கள் செல்வ லட்சுமி, கற்குவேல், வெங்கடேஷ், உள்பட பேராசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் உடற்கல்வியியல் துறை பேராசிரியர் ஜெயசிவா நன்றி கூறினார்


