திருச்செந்தூரில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் பாலநாகம்மாள் (21), நேற்று வீட்டிலிருந்த அவர் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து திருச்செந்தூர் தாலூகா காவல்துறை ஆய்வாளர் முரளிதரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி நடத்தி வருகிறார்.


