கருங்குளத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட 75 குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. கருங்குளம் ஆர்.சி கோயில் தெரு கோப் பார் சில்ரன் இல்லத்தில் நடந்த விழாவிற்கு கருங்குளம் பஞ்சாயத்துத் தலைவர் உதயசங்கர் தலைமை வகித்தார். கோப் பார் சில்ரன் மாவட்ட தலைவர் அருட்தந்தை சாமுவேல் தங்கராஜ் 75 குடும்பத்துக்கு அரிசி பருப்பு உள்படப் பொருள்களை வழங்கினார். மண்டல பொறுப்பாளர் செல்வமுத்து வரவேற்றார். அரசு மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற அலுவலர் மூக்கன் உள்படப் பலர் கலந்துகொண்டனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெபராஜ் நன்றி கூறினார்.


