கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 40 லட்சம் மதிப்பீட்டில் லிபர்டி குழுமத்தின் சார்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லிபர்டி குழுமத்தின் சர்பில் எஸ்எஸ்டிஎம்.கணேஷ்பாபு நினைவாக புதிய வகுப்பறை கட்டிடம் ரு40 லட்சம் மதிப்பீட்டில் கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு பள்ளியிடம் ஒப்படைக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார். லிபர்டி குழுமத்தின் எஸ்எஸ்டி.கிருஷ்ணமூர்த்தி, பூர்ணசந்திரா, செல்ல பார்வதிகணேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி புதிய வகுப்பறை கட்டடத்தையும், கல்வெட்டையும் திறந்து வைத்து லிபர்ட்டி குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், நகர் மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன், ஊராட்சி ஒன்றிய சேர்மன் கஸ்தூரிசுப்புராஜ், ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.
இதில் வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் ரெங்கம்மாள், கௌரி, முத்து முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் உதவி தலைமை ஆசிரியை உஷா ஜோஸ்பின் நன்றி கூறினார்.முன்னதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் புதிதாக திறக்கப்பட உள்ள கட்டடத்தை முதல் நாள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


