
வல்லநாட்டில் தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். பொதுசுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனர் செல்வநாயகம், சுகாதாரத்துறை துறை இயககுனர் பொற்செல்வன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், கருங்குளம் பி.டி.ஒ பாக்கியலீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, மதுரம் பிரைட்டன், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி, மருத்துவ அதிகாரி டாரில், அசுவினி ஜெனிபர், பிரியா, கிருஷ்ண ஜோதி, சித்த மருத்துவர் செல்வகுமார், ரதி செல்வம், மருந்தளுனர் வெங்கடேசன், வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திராமுருகன், சுரேஷ் காந்தி, ராமஜெயம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.