செய்துங்கநல்லூரில் மெகா தடுப்பூசி முகாமை பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சரவணபெருமாள், கிராம செவிலியர் விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்துங்கநல்லூரில் மொத்தம் 140 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.


