திருக்கோளூரில் விவசாய ஆர்வலர் குழு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
ஆழ்வார்திருநகரி அருகே உள்ள திருக்கோளூரில் ஆழ்வார்திருநகரி வட்டார விவசாய ஆர்வலர் குழு விழிப்புணர்வு கூட்டம், வட்டார பொறுப்பாளர் கருப்பன் மற்றும் ஈனமுத்து தலைமையில் இன்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு மாரியப்பன், வேம்பரசன், கலைகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கமுத்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாவதை தடுக்க ஆத்தூரான்கால் பகுதிகளில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது, ஆழ்வார்திருநகரி சுற்றியுள்ள கிராமங்களில் வடிகால் வசதிகளை மேம்படுத்துவது, வேளாண்மை சார்ந்த மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிப்பது, இயற்கை வேளாண்மை குறித்த கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் மளவராயநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள், சுகாதார பயிற்சியாளர் கல்யாணி, மணவை ராகவன் ஆகியோர் விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பேசினார். செந்தமிழ் அறக்கட்டளை ஆலோசகர் மனவை ஆனந்தன் கலந்துரை வழங்கினார்.
கூட்டத்தில் அரசாங்கநகர் சரவணன், தேமாங்குளம் லட்சுமணன், பெருமாள், முருகேசன், பரமசிவன், சத்தியா, முருகவல்லி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். நிறைவாக டிவிஎஸ் களப்பணியாளர் முருகன் நன்றி கூறினார்