தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் இம்மானுவேல் சேகரனாரின் 64 ஆவது நினைவேந்தல் வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மருதநில மக்கள் பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி வியனரசு. தென்கரைக்குள நீரினைப்பயன் படுத்துவோர் சங்கத் தலைவர் செம்பூர் நயினார் முன்னிலை வகித்தார்.தென்கரை நாட்டுச் சங்கத் தலைவர் ஆதிநாதபுரம் முருகன் நிகழ்வைக் தொடங்கி வைத்தார்.தமிழக மக்கள் முன்னேற்றக் கழக பொறுப்பாளர் குருகாட்டூர் செல்வம் முன்னிலையில் அதே கழகத்தைச் சார்ந்த நெல்லை கண்மணிமாவீரன் , சர்மிளா கண்மணி ஆகியோர் கலந்து கொண்டு நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்.தேவேந்திரர் சேனா அமைப்பின் அகில இந்திய துணைத்தலைவர் குணசேகரன் அவர்கள் , நாற்று நடும் மருதநில மங்கையர் திலகங்களுக்கு புத்தாடைகளை வழங்கி சிறப்பித்தார்.அவருடன் தொழிலதிபர் ஸ்டாலின் உடன் வந்து கலந்து கொண்டார்.தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மாரிச் செல்வம் அவர்கள் தலைமையில் அக்கட்சியினர் பங்கேறனர்.ம.தி.மு.க சார்பில் தெற்கு மாவட்டச் செயலாளர் புதுக்கோட்டை செல்வம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் கருணாநிதி தலைமையில் வந்து புகழ் வணக்கம் செலுத்தினர்.
இராஜபதி ஊராட்சித் தலைவர் தலைமையில் இளைஞர்கள் திரளாக வந்தனர்.காங்கிரசு கட்சி சார்பில் வட்டாரத் தலைவர் கோதண்டராமன் தலைமையிலும்திரளானபேர் வந்து மரியாதை செலுத்தினர்.நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சிவக்குமார் தலைமையில் மாவட்டச் செயலாளர் சுப்பையாபாண்டியன், அழ்வை ஒன்றியச் செயலாளர் செம்பூர் சுடலை ஆகியோர் திரண்டு வந்து இம்மான்வேல் சேகரனார் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்.முன்னதாக அ.இ.அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் மாண்புமிகு முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் அவர்கள் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல் அழ்வை ஒன்றிய செயலாளர் செம்பூர் இராஜ்நாராயணன்,
அழ்வை நகரச் செயலாளர் செந்தில்ராஜ்குமார் உள்ளிட்டோர் திரண்டு வந்து இம்மானுவேல்சேகரனார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க சார்பில் மாவட்ட இளைஞரணி செயலாளர் கல்லை .இராமசெயம் அவர்கள் தலைமையில் அழ்வை நகரச் செயலாளர் மணிமுருகன் தங்கள் கழகத் தொண்டர்களுடன் திரண்டு வந்து அலங்கரித்து வைக்கப்பட்ட இம்மானுவேல் சேகரனார் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செய்து சிறப்பித்தனர்.முடிவில் தியாகி இம்மானுவேல் சேகரன் ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் பழனி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.இந்நிகழ்வுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி பேராதரவு தந்த மேற்படி சங்கத்தின் வளர்ச்சிக்காக தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி சார்பில் 5,000 நிதியை கட்சியின் தலைவர் வியனரசு சங்கத் தலைவர் பழனியிடம் வழங்கி நிகழ்வை நிறைவு செய்தார்.


