சாத்தான்குளம் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கருங்கடல் பகுதியில் உள்ள ஸ்ரீஇசக்கிஅம்மன் கோவிலில் கடந்த 10ஆம் தேதி இரவு கோவிலின் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் திருடுபோய்விட்டது. இதுகுறித்து அக்கோவிலின் தர்மகர்த்தா சுப்பிரமணியன் (63) என்பவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் விஜயகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டதில், பெருமாள்குளம் ஆதிலிங்கம் மகன் சதீஷ்முருகன் (23), என்பவர் உண்டியல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சதீஷ்முருகனை கைது செய்து அவரிடமிருந்து ரூ.4,500 பணத்தையும் பறிமுதல் செய்தார்.


