ஏரல் அருகே பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 69 வயது முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் தர்ம பெருமாள் மகன் அழகு ராமகிருஷ்ணன் (69). இவரது வீட்டில் வேலைபார்க்கும் 37 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


