
தூத்துக்குடியில் முப்பெரும் விழா
மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ்க்குப் பாராட்டு விழா,
இரு நூல்கள் வெளியீட்டு விழா,
உயர் கல்வி மாணாக்கருக்கு நிதியுதவி வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய வளாகத்தில் புனித அந்தோனியார் அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு அருட்பணி செல்வராஜ் தலைமை தாங்கினார்.
பனிமய மாதா பேராலய அதிபர் அருட்பணி குமார் ராஜா வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்வுக்கு முன்னாள் தாசில்தார் வலன்சியா சில்வேரா, தொழிலதிபர் யோகேஷ், குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றத் தலைவர் ஹெர்மென் கில்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தன் 90 ஆம் அகவையில் கலாபன் வாஸ் பத்தொன்பதாவது படைப்பாக எழுதியுள்ள ” காற்றில் ஒரு கட்டுமரப் பயணம்” நூலை கோரமண்டல் சமூக நற்பணி மன்றத் தலைவர் பகவத்சிங் வெளியிட, சிப்பிக்குளம் பிச்சையா முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். நூலை அரும்பணி ஜாண் சுரேஷ் அறிமுகம் செய்து பேசினார்.
நினைவில் வாழும் ஆலந்தலை அலன் மைக்கிள் எழுதிய
” மரத்தடி மேடை ” நூலை ராய் அகடாமி வளன் சந்திரா வெளியிட, தொழிலதிபர் மெரிண்டோ வி. ராயர் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். நூலை கலாபன் வாஸ் அறிமுகம் செய்து பேசினார்.
இந்நிகழ்வில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மீனவ இளையோர் உயர்கல்வி பயில உதவித்தொகையை நெய்தல் எழுத்தாளர்கள் வாசக அன்பர்கள் பலர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அருட்பணி சுந்தரி மைந்தன், முனைவர் பிரான்சிஸ், ஆசிரியர் சிலுவை அருள், சாக்ரோ, கப்பற்படை ட்ரூப் கமாண்டர் கில்பர்ட் பர்னாண்டோ, மீனவன் குரல் செல்வ ராயன் சாம்சன், மணவை வலன்டின், எழுத்தாளர் கொற்கை ஜூடின், பழையகாயல் வின்சென்ட் பென்சிகர், பிரபு ராயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ரோமால்டு வரவேற்றார். ஆசிரியர் அமிர்தராஜ் பாமாலை பாடினார். நிகழ்ச்சியை ஆசிரியர் பெனிட்டன் தொகுத்து வழங்கினார். எழுத்தாளர் கலாபன் வாஸ் ஏற்புரை வழங்கினார்.
நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கத்தின் அமைப்பாளர் எழுத்தாளர் நெய்தல் அண்டோ நன்றி கூறினார்.