பேரழிவிலிருந்து உலக மக்களை காக்க வேண்டி தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் கஞ்சி கலய ஊர்வலம் பால் அபிஷேகம் நடைபெற்றது.
தூத்துக்குடி 3வது மைல் அருகே திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் மழைவளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், தொழில்வளம் பெருகவும், கல்வி அறிவு சிறக்கவும் வேண்டி அதிகாலையில் குரு பூஜை, வினாயகர் பூஜையுடன் துவங்கியது. முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஆன்மிக கஞ்சி கலய ஊர்வலத்தை தர்மகர்த்தா அய்யம்பெருமாள் முன்னிலையில் தூத்துக்குடி பொறுப்பாளர் மாரிமுத்து துவக்கி வைத்தார். ஆன்மிக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சக்திபீடத்தை வந்தடைந்து அன்னைக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து பேரழிவிலிருந்து உலக மக்களை காக்க வேண்டி கருவறை அன்னைக்கு பக்தர்கள் பால் அபிஷேக நிகழ்ச்சியை கூட்டுறவு பண்டகசாலை பொதுமேலாளர் கந்தசாமி தொடங்கி வைத்தார். அன்னதானம் மற்றும் அருட்பிரசாதம் வழங்கும் பணியை சப்.இன்ஸ்பெக்டர் பெருமாள் தொடங்கி வைத்தார்.



