தூத்துக்குடியில் பயிற்சி மையத்திற்கு வந்த இளம்பெண் திடீரென காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல், கீழத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் கோமள வசந்தி (25). இவர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகில் உள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். நேற்று காலை வகுப்பிற்கு வந்த அவர், 11 மணியளவில் அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.
பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பிச் செல்லவில்லை. இதையடுத்து அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை பெருமாள் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்


