தூத்துக்குடியில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவின் பேரி குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக தூத்துக்குடியில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அய்யாசாமி நகர், ராம் நகர், ஆதிபராசக்தி நகர் ஆகிய பகுதிகளுக்கு தாசில்தார் சுசிலா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் தீபலட்சுமி, சர்வேயர் பிரபாகர் ஆகியோர் கொண்ட குழு, முத்தம்மாள் காலனி, குறிஞ்சி நகர், ரஹ்மத் நகர், கதிர்வேல் நகர் ஆகிய பகுதிகளுக்கு தாசில்தார் ராமசுப்பு தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தீபலட்சுமி பாலமுருகன் சர்வேயர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழு,
கேடிசி நகர், ஹவுசிங் போர்டு, ஓம் சாந்தி நகர், தாளமுத்து நகர் பிளாக் 3 தாசில்தார் முருகானந்தம் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தீபலட்சுமி விக்னேஷ் ஆகியோர் கொண்ட குழு, பிளாக் 4, அம்பேத்கார் நகர், சத்யா நகர், சுந்தரவேல் புரம் ஆகிய பகுதிகளுக்கு தாசில்தார் சுந்தர ராகவன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் தீபலட்சுமி கொண்ட குழு, பிளாக் 5 ஆரோக்கியபுரம் தாளமுத்து நகர், டிஎஸ்எஸ் ஜங்ஷன், கிருஷ்ணராஜ புரம் ஆகிய பகுதிகளுக்கு சுப்புலட்சுமி தாசில்தார் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் விக்னேஷ் ராதா தலைமையில் குழு,
பிளாக் நம்பர் 6 மாப்பிள்ளையூரணி பகுதிகளுக்கு தாசில்தார் வேலம்மாள் தலைமையில் விக்னேஷ் கிராம நிர்வாக அலுவலர் கொண்ட குழு, பிளாக் 7 மாதா நகர் முதல் பூ பாண்டியபுரம் வரை பகுதிகளுக்கு தாசில்தார் எலிசபெத் மேரி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் சர்வேயர் விஜயகுமார் தலைமையில் கொண்ட குழு, பிளாக் 8 சங்கரபேரி முதல் நிலா சீ புட்ஸ் நிறுவனம் வரை, உப்பாற்று ஓடை பகுதிகளுக்கு தாசில்தார் சுரேஷ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தீபலட்சுமி பிரசாத் வீரமாமுனிவர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்ப்டுள்ளது.
இந்த குழுவினர் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு உள்ள எல்லா இடங்களையும் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை விரைவாக எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தண்ணீர் செல்ல வழிவகை ஏற்படுத்த வேண்டும் ஆக்கிரமிப்பு பகுதியில் அரசு கட்டிடங்கள் பள்ளிகள் இருந்தால் அறிக்கையாக தர வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


