ஸ்ரீவைகுண்டம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இசவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் அருண் பான்டியன் (45). கூலித் தொழிலாளி இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இவருக்கு கடந்த சில தினங்களாக சரியான வேலையில்லையாம். இதனால் குடும்பத்தில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனையடைந்த அருண் பாண்டியன் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


