செய்துங்கநல்லூரில் சாலையை விரிவு படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் நடைபாதை அமைக்க மிகவும் பழமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.
செய்துங்கநல்லூர் சந்தை அருகில் சாலையை விரிவு படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக சி.எஸ்.ஐ ஆலயத்துக்கு எதிரே உள்ள மிகவும் பழமையான மரங்கள் இன்று அதிகாலை முதலே வெட்டி எடுக்கப்பட்டது. இந்த மரங்கள் பல நூற்றாண்டுகளை கடந்தது. இதே போல் விரிவு படுத்தும் பணியில் பல மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு வருகிறது. ஒரு மரத்தினை வெட்டினால் 10 மரங்களை உருவாக்க வேண்டும் என உயர்நீதி மன்ற உத்தரவு உள்ளது. அதன் படி மரங்களை வளர்க்கும் பணியை ஒப்பந்தகாரர்களிடம் அரசு ஒப்படைத்திருக்கிறது.
இதற்கிடையில் செய்துங்கநல்லூர் பஜாரில் சாலை அமைக்கும் பணி மந்த நிலையில் நடந்து வருகிறது. ஏற்கனவே அமைத்த சாலை அறைகுறையாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியுறுகிறார்கள். எனவே செய்துங்கநல்லூரில் சாலை பணிகளை விரைவாக அமைக்கவேண்டும். மரங்களுக்கு பதில் பல மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். சாக்கடை பணியை விரைவு படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
————————–


