ஆதிச்சநல்லூரில் நடைபெறும் ஆய்வை தூத்துககுடி புனித மரியன்னை கல்லூரி வரலாற்று துறை மாணவிகள் பார்வையிட்டனர்.
ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க கடந்த அக்டோபர் மாதம் 10 ந்தேதி முதல் அகழாய்வு நடந்து வருகிறது. இதற்காக நான்கு இடத்தில் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது. இந்த அகழாய்வில் 200 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட சுண்ணாம்பு தரை, சங்க கால வாழ்விடம் இரண்டு அடுக்கு முதுமக்கள் தாழிகள் போன்றவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. மேலும் பல்வேறு அற்புத தகவல்கள் இந்த அகழாய்வு மூலம் கிடைக்கும் என கருதப்படுகிறது. இதற்காக திருச்சி மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அருண் ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் செய்து வருகின்றனர். மழை காலமாக இருக்கும் காரணத்தினால் ஷெட் அமைக்கப்பட்டு பணி விரைவாக நடந்து வருகிறது.
இந்த ஆய்வை காண பல்வேறு இடங்களில் இருந்து கல்லூரி மாணவ மாணவிகள் வந்து செல்கின்றனர். இன்று தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி வரலாற்று துறை மாணவிகள் 100க்கு மேற்பட்டவர்கள் வருகை தந்தனர். இவர்களை நெல்லை அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி வழிநடத்தினார். இவர்களுக்கு தொல்லியல் ஆய்வாளர் எத்தீஸ்குமார் விளக்கம் அளித்தார். கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் அகழாய்வு குறித்த சந்தேகத்தினை கேட்டறிந்தனர். மாணவிகள் கேட்ட கேள்விகளுககு ஆய்வாளர் எத்திஸ் குமார் உள்பட ஆய்வாளர்கள் பதில் அளித்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தொல்லியல் ஆய்வாளர்கள் ராணி , பாரந்தாமன், விக்னேஷ், அருண், கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் எஸ்.எம். ரோஜாப்பூ, டி.வினோபா, கிளாடிஸ், கெ.மேரி வினோலோபோ உள்பட பலர் வந்தனர்.


