செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து முப்படை தலைமை தளபதிக்கு வீர வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் வெலிங்டன் மையத்தில் நடக்க இருந்த கருத்தரங்கில் பங்கேற்க தமிழகம் வந்தார். பிபின் ராவத் உள்பட 14 பேருடன் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சரியாக மதியம் 11.47 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது.
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் மையம் செல்லும் வழியில் ராணுவ ஹெலிகாப்டர் காட்டேரி என்ற பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலூகா கருங்குளம் ஒன்றிய செய்துங்கநல்லூர் அலுவலகத்தில் வைத்து கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் ஆணையாளர் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டு பிபின் ராவத் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்


