ஸ்ரீவைகுண்டம் தாலூகா வல்லகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பட்டா மாறுதல் மு£ம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் கமலம் குமார் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமேஷ் மனுக்களை பெற்று கொண்டு நடவடிக்கை எடுத்தார். வல்லகுளம் கிராம நிர்வாக அதிகாரி சக்திவேல் , அணியாபரதநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன், வல்லகுளம் பஞ்சாயத்து கிளார்க் சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் கோபால், சமூக சேவகர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முகாமில் 35மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுவில் பட்டா மாற்றம் செய்தல், உதவி தொகை கேட்டல் உள்பட பல மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்


