முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான நல்லாண் பிள்ளை பெற்ற குணவதியம்மன்கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 23.04.2026 அன்று மகா கும்பாபிசேகம் நடந்தது. அதன் பின் தொடர்ந்து 48 நாள்கள் மண்டல பூஜை நடந்தது. அதை பூர்த்தி மற்றும் மகாசண்டியாக வைபவம் நடந்தது. இதையொட்டி முதல் நாள் இரவு 7 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, புண்யாக வாசனம், ஸ்ரீமகாசண்டி யாக கலச ஸ்தாவனம், வடுக பலி, யோகினி பலி நடந்தது.
இரண்டாம் நாள் காலை 8 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, பணயாக வாசனம், பஞ்ச கவ்யம், தீப பூஜை, சங்க பூஜை நவாவர்ண வேதிகார்ச்சனை , வடுகப்ரம்மச்சாரி பூஜை, கோபூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, செள்பாக்ய திரவ்யாகுதி, மகா பூர்ணாகதி மகாபசேம் மகா சண்டியகலாபிசேகம்,புஷ்பாஞ்சலி, மகாதீபாரதனை பிரசானம் வழங்குல் ஆகிய நிகழ்சச்நி நடந்தது. பைரவருக்கு பூஜை வடை மாலை சாற்றுதல் மகா தீபாராதனை, பிரசாகம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் யாகம் ஏற்பாடுகளை ªல்வம் பட்டர் தலைமையில் சிவச்சாரியார்கள் செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பக்த ஜனா சங்க தலைவர் விஸ்வநாதன், செயலாளர் வெங்கடராமன், கமிட்டியார் பெங்களூர் வாசு, கணேஷ், முத்தாலங்குறிச்சி காமராசு, ஆறுமுகம், ராமவிநாயகர் அறங்காவலர் வள்ளிநாதன், விட்டிலாபுரம் பாண்டுரெங்கர் கோயில் அறங்காவலர் கோமதி, ஊர் பிரமுகர்கள் குருநாதன், முருகன், பிச்சகண்ணு, சுப்பையாபாண்டியன், கனிபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


