நாவலின் பெயர் – கொன்றால் தான் விடியும்
ஆசிரியர் – முத்தாலங்குறிச்சி காமராசு
பதிப்பகம் – பொன்சொர்ணா பதிப்பகம்
பக்கம் – 159
விலை 200
தொடர்பு எண் 8760970002
விமர்சனம் – மீ.நிஷா, இரண்டாம்ஆண்டு முதுகலை தமிழ் இலக்கியம், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி & திருச்செந்தூர்.
விமர்சனம்.

மரணம் ஒருபோதும் முடிவல்ல.., கொலை எதற்கும் தீர்வல்ல என்பார்கள்., சிலநேரங்களில் சிலரின் மரணம் சிலவற்றின் தொடக்கமாகிறது, சிலர் செய்யும் கொலை நன்மைக்கான காரணமாகிறது…
முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “கொன்றால் தான் விடியும்” புத்தகத்தின் தலைப்பினால் ஈர்க்கப்பட்டு நான் வாங்கி வாசித்த புத்தகம்…
வாசிக்க வாசிக்க, தனியே திரையரங்கில் அமர்ந்து ஒரு கிரைம் மூவி பார்த்த அனுபவம்.
யார் யாரைக் கொன்றார் ? யாரைக் கொன்றதால் என்ன விடிவு கிடைத்தது? போன்ற கேள்விகளுக்கு கிளைமேக்ஸில் விடை கூறியுள்ளார் ஆசிரியர். அறிந்துகொள்ள படியுங்கள் பகிருங்கள்…..


