இராமனுஜம்புதூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சமூக் அறிவியியல் ஆசிரியர் உதவியால் மதுரைக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.
தமிழகம் கல்வியில் பல முன்னேற்றங்களை கண்டாலும் கூடகிராமபுறத்தில் கல்வி கற்றும் மாணவ மாணவிகள் பலர் ஏழ்மையில் தான் வாழுகிறார்கள். அதில் சிலர் தனது உறவினர்கள் உடன் கூட வெளியூருக்கு ரயிலில் சென்றதில்லை என்ற உண்மை மறுக்கப்படுவதிற்கில்லை.
இராமனுஜம்புதூர் அரசு மேல் நிலைப்பள்ளியிலும் இதே போல் பல மாணவ மாணவிகள் உள்ளனர். இதற்கிடையில் இங்கு பணியாற்றும் சமூக அறிவியியல் ஆசிரியர் ஜெயராமன் கடந்த வருடம் 10 வது வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் போட்டி ஒன்று வைத்தார்.
அதில் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளை மதுரைக்கு ரயிலில் ஏற்றி சென்று முக்கிய இடங்களை சுற்றி காட்டுவேன் என கூறியிருந்தார்.
அதன் படி முதல் 10இடம்பிடித்த மாணவ மாணவிகளை கூட்டிக்கொண்டு அவர் மதுரை திருமலை நாயக்கர் மகால், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் காந்தி மகால் உள்பட பல பகுதிகளை சுற்றி காட்டினார். இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் இராமனுஜம்புதூர் அரசுமேல் நிலைப்பள்ளியில் இருந்து வழி அனுப்பி வைத்தார். சுற்றுலாவில் சமூக அறிவியல் ஆசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது துணைவியாரும் ஆசிரியையுமான அந்தோணி சாராள் உடன் சென்றனர்.
தனது சொந்த செலவில் மாணவிகளை சுற்றுலா கூட்டிச்சென்ற ஆசிரியரை, தலைமை ஆசிரியர் , சக ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.