தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை ஸ்காட் குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜார்ஜ் கிளிங்டன் வரவேற்புரையாற்றினார். இதனை தொடர்ந்து கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் கல்லூரியின் பயின்று வேலைவாய்ப்பு பெற்ற அனுபவங்களை பற்றி எடுத்துரைத்தனர்.
பொதுமேலாளர் ஜெயக்குமார், இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான் கென்னடி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அப்போது தென் தமிழகத்திலேயே சிறப்பான அந்தஸ்தை பெற்ற கல்லூரியாகவும், மாணவர்களுக்கு திறமையான பேராசிரியர்கள் செயல்முறை திறன் பயிற்சியை அளிக்கிறார்கள். தொழில் ஆதரவு கல்விக்காக பன்னாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலை கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றபட்டுள்ளது என்று கூறினார்கள்.
நிறுவனர் கிளிட்டஸ் பாபு பேசுகையில், ‘முதலாண்டில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களை வாழ்த்துகிறோம் எமது கல்வி நிறுவனத்தில் 100 சதவீத வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் சிறந்த கல்வி, நவீன ஆய்வகங்கள் மூலம் கற்பிக்கப்படுகிறது. நீங்கள் சாதனை புரிவதற்கு எங்கள் கல்லூரி பேராசிரியர்கள் அர்ப்பணிப்போடு கல்வியை கற்றுத்தருகிறார்கள்.
தொழில் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய அளவில் நவீன ஆய்வகங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுவதால், எங்கள் கல்லூரி மாணவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக்கொள்கின்றனர். மாணவர்கள் வளர்ச்சிக்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கல்வி ஆராய்ச்சி இயக்குநர் முகமது சாதிக் ஸ்காட் கல்வி குழும திறன் மற்றும் வேலைவாய்ப்பு துறை இயக்குநர் ரவிசங்கர், அனைத்து துறை பேராசிரியர்கள், முதலாண்டு மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர் விக்னேஷ் செய்திருந்தார்.