தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு வங்கி கணக்கு அட்டை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (09.08.2024) கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாட்டு மாணவர்கள் தரணியை வென்றிட, உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதனைதொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறும் வங்கி கணக்கிற்கான அட்டைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், முதல்வர், கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முனைவர்.தேரடிமணி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


