தூத்துக்குடி செயின்ட் ஜோசப் பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட குரூஸ்புரம் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட கல்வி அதிகாரி ரெஜினா, பள்ளியின் தலைமை ஆசிரியர், மாமன்ற உறுப்பினர்கள் எடின்டா, மெட்டில்டா, பவானி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


