தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் “பிஸ்காம் 2024” பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் இயற்பியல் துறை, மரியன் ஸ்டார் சென்டர், இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பவியல் துறையின் நிதியுதவியுடன், ஸ்டார் கல்லூரி திட்டத்தின் கீழ், PHYSCOM 2024 என்ற பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி நடைபெற்றது. எழுத்துத் தேர்வின் அடிப்படையில் முதல் ஐந்து அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த ஐந்து அணிகளும் வினாடி வினா போட்டிக்கு முன்னேறின.
இப்போட்டியில் அழகர் பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதல் பரிசும், ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் பரிசும், சக்தி விநாயகர் இந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூன்றாம் பரிசும் பெற்றனர். தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் (தன்னாட்சி) செயலாளர் அருட்சகோதரி ஷிபானா நிறைவுரையாற்றினார். வெற்றி பெற்ற மாணவர்களின் கடின உழைப்பையும், சாதனையையும் பாராட்டி கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


