முறப்பநாடு சொக்கநாதர் கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கோரி அமைச்சர் சேகர்பாபுவிடம் டில்லி தமிழ் சங்கம் முன்னாள் துணைத்தலைவர் பெருமாள் மனு அளித்தார்
இதுகுறித்து அவர் மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தில் பழமை வாய்ந்த சிவாலயமாக மீனாட்சி அம்பாள் உடனுறை சொக்கநாதர் கோயில் விளங்கிவருகிறது.இந்த கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .உடன் முறப்பநாடு தியாகசிவம் உள்ளார்


