பாவநாசம் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா தெரிவித்தார்.
வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ,விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தீர்ப்பு விவசாயத்திற்கு முக்கிய பங்காற்றி வருகிறது. தாமிரபரணி தொடங்கும் இடமான பாவநாசத்தில் கழிவுகள் கலக்கிறது எனவே காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்து ராமன் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக நெல்லை மாநகராட்சி விகேபுரம்,அம்பாசமுத்திரம், நகராட்சி ,கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், முக்கூடல் ,சேரன் மகாதேவி, கோபால சமுத்திரம் ,மேலச்செவல், நாராயணம் மாள் பேரூராட்சி பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அதுதொடர்பாக அருகே தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா தலைமையில் தாமிரபரணி வடிவே நிறுத்த கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று காலை பாவநாசம் விகேபுரம் பகுதி தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆய்வு மேற்கொண்டனர் விகேபுரம் ஞானி யார் தோப்பு உள்பட பல்வேறு இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர் பின்ன நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா கூறும்போது; பாவநாசம் விகேபுரம் தாமிரபரணி ஆற்றில் கழிவு கலப்பதாக வந்த புகாரின் பேரில் ஆய்வு செய்தோம் முதற்கட்டமாகக் கழிவுகள் கலக்கும் இடமாக விகேபுரம் ஞானியர் தோப்பு மீனாட்சி புரம் அம்பலவாண புரம் ஆகிய 3 இடங்களில் ரூபாய் 8.75 லட்சம் மதிப்பில் சிறியதாகச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு கழிவுநீரைச் சுத்திகரித்து பின்னர் ஆற்றில் விடப்படும் இது சம்பந்தப்பட்ட வரும் 9-ஆம் தேதி கரூர் நகராட்சி சார்பில் விடப்பட்டு பணிகள் தொடங்கும் இந்தப் பணிகள் முடிவடைந்ததும் பாவநாசம் யானை பலம் உள்ளிட்ட மற்ற இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆய்வில் நகராட்சிகளின் நிர்வாக நெல்லை மண்டல புணர் விஜயலட்சுமி தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் அண்ணாதுரை உதவி செயற் பொறியாளர் தங்கராஜ் உதவிப் பொறியாளர்கள் ஆதிமூலம் நந்தினி மகேஷ்வரன் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரெனால்ட் விகேபுரம் நகராட்சி ஆணையர் லியோன் நகராட்சி மேலாளர் தனலட்சுமி தலைமை எழுத்தர் கணேசன் சுகாதார ஆய்வாளர் கணேசன் பணி மேற்பார்வையாளர் பலர் கலந்து கொண்டனர்.


