1832 – கனடாவில் கியூபெக்கில் ஐரிய குடியேறிகளால் கொண்டுவரப்பட்ட கொள்ளை நோய் காரணமாக 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1863 – மெக்சிக்கோ நகரம் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
1893 – மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்.
1905 – நோர்வே சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது.
1917 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில் மெசைன் என்ற இடத்தில் 10,000 ஜெர்மனியப் படையினர் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டையில் 23 கனேடிய போர்க்கைதிகளை நாசிப் படைகள் கொன்றனர்.
1967 – இசுரேலியப் படைகள் ஜெருசலேம் நகரினுள் நுழைந்தனர்.
1981 – இஸ்ரேலிய வானூர்திகள் ஈராக்கின் ஒசிராக் அணுக்கரு உலை மீது குண்டு வீசித் தாக்கி அழித்தன.
1989 – சுரினாமில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர்.
1991 – பிலிப்பீன்சில் பினடூபோ எரிமலை வெடித்து 7 கிமீ உயாரத்துக்கு அதன் தூசிகள் பறந்தன.
2000 – கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அமைச்சர் சி. வி. குணரத்ன மற்றும் தெகிவளை மாநகர உதவி மேயர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
2006 – மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் இடம்பெற்ற கண்ணிவெடியில் சிக்கி 6 மாதக் குழந்தை உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.


