திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், நராயணகுரு மண்டபத்தில் பனைவிழா மற்றும்
பனை பொருட்கள் கண்காட்சி நடந்தது. ஹெர்போகேர் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்
நவீன்பலாஜி தலைமை வகித்தார். டாப் டிவி ராஜா வரவேற்றார். நிகழ்ச்சியை சுபகலா தொகுத்து
வழங்கினார். பனைப்பொருள் கண்காட்சியை நெல்லை அகில இந்திய வானொலி நிகழ்ச்சி
தொகுப்பாளர் சந்திரபுஷ்பம் துவக்கி பனை பாடல்கள் மூலம் விழிப்புணர்வு செய்து வைத்தார். பனை
விழிப்புணர்வுக்காக மும்பை முதல் நாகர்கோவில் வரை பைக் பயணம் செய்து சாதனை புரிந்த காட்சன்
சாமுவேல், தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற தாமரை செந்தூர் பாண்டியன், தமிழக அரசின்
தமிழ்ச்செம்மல் விருதுபெற்ற முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்
பனைபொருள் சேகரித்தவர்கள் மற்றும் பனை விதை நட்டவர்களுககு சான்றிதழ் வழங்கப்பட்டது. பனை
காவலன் விவேகாந்தன், பனைப்பித்தன் எம்.ஆர். பாலாஜி, பனைப்புரட்சியாளர் கோயில் பிச்சை
பிரபாகர், பனையோலை பித்தன் பால்பாண்டி, கற்பக விருட்சம் கிரேஸ் ஜுலியட் டயானா,
பனைத்தோழன் ரெத்தினவேல் ராஜன், பனை நேசன் சு.மு.முருகன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பனை நண்பர்கள் இயக்கம், டாப் டிவி ராஜா பவுண்டேசன், டாப்
ராஜா ஸ்டுடியோ ஊழியர்கள், நம்ம ஊரு நம்ம ஆறு கூட்டமைப்பு செய்திருந்தது


