![](https://www.muthalankurichikamarasu.com/wp-content/uploads/2021/09/01-3.jpg)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதிகளில் கொரனா தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், பொதுமக்களை தடுப்பூசி போட ஊக்குவிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும், முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவர் சுமதி மற்றும் சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வராஜ் ஏற்பாட்டில் சாத்தான்குளம் பகுதியில் கொரனா தடுப்பூசி போடும் பொதுமக்களுக்கு ஸ்மார்ட் போன், இன்டக்ஷன் ஸ்டவ், கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களைத் தடுப்பூசி போடும் நபர்களுக்கு பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
அதன்படி இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தடுப்பூசி போடும் நபர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை ஒரு சீட்டில் எழுதி ஒரு பெட்டியில் போட்டு வார இறுதி நாட்களில் தடுப்பூசி போட்டவர்களில் குலுக்கல் முறையில் 3 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ஸ்மார்ட்போன், இன்டக்ஷன் ஸ்டவ் கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கப்படும் என சுகாதாரத்துறையினர் வினோதமான முறையில் ஆப்பர் அறிவித்துள்ளனர்.
சாத்தான்குளம் பகுதியில் கொரனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை மாவட்டத்திலேயே மிகவும் குறைந்த அளவில் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.